search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் திருட்டு"

    நொய்யல் அருகே வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 26 பவுன் நகை மற்றும் காரை திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச்சாலையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 57). இவர் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தர். பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது. 

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தனார். இன்ஸ் பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும் மாயமான கார் குறித்த தகவல்கள் பிற மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதற்கிடையில் மதுரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சம்பந்தப்பட்ட காரை போலீசார் மடக்கினர். அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்னர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆரப்பாளையத்தை சேர்ந்த பட்டறை சுரேஷ் (29) என்பது தெரியவந்தது.

    போலீசர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத் (29), திருச்சி துவாக்குடியை சேர்ந்த டேவிட் (30) ஆகியோருடன் இணைந்து நொய்யல் குறுக்கு சாலையில் உள்ள வீட்டில் 26 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மதுரை நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்து பட்டறை சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார். மேலும் அவரிடம் இருந்த 26 பவுன் தங்க நகை யையும் மீட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், டேவிட் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தாண்டிக்குடி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள வாழைகிரி என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த உதயநிதி என்ற மதி (வயது 27) என்பதும் அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காருடன் உதயநிதி பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதான உதயநிதி மீது பட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெரம்பலூரில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து காருடன் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறை மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32), துபாயில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கார்த்திகா (25). கர்ப்பிணியான இவர் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

    இந்தநிலையில் இன்று காலை மகேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கார்த்திகாவுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  அப்போது வீட்டின் பீரோ மற்றும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

    மேலும்  வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரும் திருடப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆந்திராவில் திருடிய கார்களை சென்னையில் விற்பனை செய்த காட்பாடி வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சித்தூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கார்கள் திருட்டு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த்பட்டேல் பலமனேர் குற்றவியல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கார் திருட்டு கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சித்தூரை அடுத்த கங்காவரம் மண்டலம் தண்டலம்பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 7 கார்கள் தொடர்ந்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார்களை மடக்கி நிறுத்தினர். இதை பார்த்த காரில் வந்த 7 பேரும் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் 7 கார்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியபோது வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற குட்டி (வயது 32) என்பதும், இவர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கார்களை திருடி, நம்பர் பிளேட், என்ஜின் எண் ஆகியவற்றை மாற்றி சென்னையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 7 கார்களை போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் பட்டேல் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘தப்பி ஓடிய கார் திருட்டு கும்பலை சேர்ந்த 6 பேரும் விரைவில் பிடிபடுவார்கள்’ என்றார்.

    வாடகை பணம் தருவதாக கூறி காரை திருடி சென்றவரை பெருந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அகமது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
    ஈரோடு அருகே வாடகை பணம் தருவதாக கூறி நூதன முறையில் கார் திருடி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அக மது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண் டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்க வில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோக நாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    பனியன் நிறுவன மேலாளர் காரை முகமூடி கும்பல் திருடி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    சேலத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மனைவி சல்மா. இவர்கள் திருப்பூர் ராக்கியா பாளையம் சொர்ணபுரி பகுதியில் வசித்து வருகிறார்கள். நவ்ஷாத் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    வாரம் ஒரு முறை இவர் குடும்பத்துடன் சேலம் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 14-ந் தேதி நவ்ஷாத் குடும்பத்துடன் சேலம் சென்றார். இன்று காலை அவர் திருப்பூர் வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் முன் புறம் நிறுத்தப்பட்டு இருந்த காரை காணவில்லை.

    நவ்ஷாத் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த லேப்டாப்பும் திருட்டு போய் இருந்தது. இது குறித்து நவ்ஷாத் அனுப்பர் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    நவ்ஷாத் வீட்டின் முன் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 1.40 மணிக்கு முகமூடி அணிந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வதும், அங்கிருந்த கார் சாவியை எடுத்து கொண்டு காரை திருடி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    கார் பதிவெண் குறித்து திருப்பூர், பெருந்துறை டோல் கேட் மற்றும் ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
    காட்பாடி அழகாபுரி நகரில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட காரை மர்ம கும்பல் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி கிளித்தான் பட்டறை விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான காரை நேற்று இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று காலையில் காரை காணவில்லை.

    இதனால் திடுக்கிட்ட ரங்கநாதன் அப்பகுதியில் காரை தேடி பார்த்தார். மேலும் அவரது வீட்டின் எதிரே உள்ள மெக்கானிக் கடையில் உள்ள சி.சிடி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் திருடப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது.

    நள்ளிரவு 2.12 மணிக்கு 2 வாலிபர்கள் ரங்கநாதன் வீட்டின் அருகே வந்து நோட்டமிடுகின்றனர். ஒருவர் டீ சர்ட்- சார்ட்ஸ் அனிந்துள்ளார். மற்றொருவர் லுங்கி, பனியன், அணிந்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் நோட்டமிட்ட அவர்கள் காரை கள்ள சாவிபோட்டு திறந்து ஓட்டி செல்கின்றனர்.

    கார் குடியாத்தம் ரோட்டில் செல்வது வரை காட்சிகள் பதிவாகி உள்ளது. இது பற்றி ரங்கநாதன் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அழகாபுரி நகரில் கடந்த சில மாதங்களில் 3 கார்கள் திருடப்பட்டன. 4-வது தடவையாக ரங்கநாதன் கார் திருடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கார் திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    எல்லைப்பிள்ளைச் சாவடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி பஜனை மடத்து தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 43). இவர், வீடு கட்டுமானத்துக்கு தேவையான ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கவுரிசங்கர் தனக்கு சொந்தமான காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கினார். இன்று காலை பார்த்த போது, காரை காணாமல் கவுரிசங்கர் திடுக்கிட்டார். காரை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. காரின் மதிப்பு ரூ. 4 லட்சமாகும்.

    இதுகுறித்து கவுரிசங்கர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து காரை திருடி சென்ற மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்.

    ×